அனுரவின் சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையம்: இன்று திறந்து வைப்பு
ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தி இன்று (26) தனது சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையத்தை திறக்கவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையமாக இது இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தின் தேர்தல் அலுவல்கள் பிரிவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் தலைமையில் இது செயற்படுத்தப்படவுள்ளது.
நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் குழுவின் தற்போதைய தலைவர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, இந்த நிலையம் கட்சியால் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயாதீனமாக இயங்கும் என தெரிவித்தார்.
25 மாவட்டங்களிலும் காணப்படக்கூடிய தேர்தல் தொடர்பான முறைகேடுகளை இந்த மையம் கண்காணிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
CATEGORIES செய்திகள்