பொதுஜன பெரமுனவுக்கு ரணிலின் மிகப்பெரிய பரிசு: என்ன தெரியுமா?

பொதுஜன பெரமுனவுக்கு ரணிலின் மிகப்பெரிய பரிசு: என்ன தெரியுமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணிலிடம் கோரியது. இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

அப்போது எமது கட்சி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியது. அவரது கொள்கைகள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளபோதிலும் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகள் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் எமது கட்சி வெளிப்படுத்தியதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு. எவ்வாறாயினும் நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தீர்மானங்களை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்

CATEGORIES
Share This