விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அதற்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித இடையூறும் இன்றி அரசாங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். இது ரணில் விக்ரமசிங்க வழமையாக செய்து வரும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் மற்றும் சுதந்திரக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பிளவுப்படுத்தினார்.
இந்நிலையில், அந்த பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் உண்மையாக உதவி செய்தோம்.
எனினும் எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி இருந்தால், அதை அவர் சிந்திக்க வேண்டும்.” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.