பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா?; குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு

பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலா?; குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளமை காரணமாக வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின்னர் அதனை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு குழப்பமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸ்திணைக்களம் மிகவும் அவசியமானதாகும்,தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழு தனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாநு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடும்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் தனது ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில்பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொள்ளவேண்டிய தேவைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் பதவியில் அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் ஒருவர் காணப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் யாரை தொடர்புகொள்வது என்ற குழப்பநிலைக்குள் நாங்கள் தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This