மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி ரணில் போட்டியிட மாட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அணியில் இணைய மாட்டார்கள் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது கட்சியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு வழங்க கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணில் அணியுடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.
எனினும், எதிர்வரும் எட்டாம் திகதி 35-40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன் இணைய தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதா என்ற பிரச்சினையை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறுகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு உங்களுடன் இணைந்து கொள்வதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்காதீர்கள்.
இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் என்பதில் சாத்தியம் இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறத் தவறினால், அவர் போட்டியிடப் போவதில்லை.
அப்படியானால் பொன்சேகாவும், ராஜிதவும் செல்ல இடமில்லாமல் போய்விடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.