விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது குறித்து ஜூலை 23-ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.