இ.தொ.கா ஸ்தாபிக்கப்பட்டு நாளை 85 ஆண்டுகள் நிறைவு; சௌமியபவனிலும், மலையகத்திலும் நிகழ்வுகள்

இ.தொ.கா ஸ்தாபிக்கப்பட்டு நாளை 85 ஆண்டுகள் நிறைவு; சௌமியபவனிலும், மலையகத்திலும் நிகழ்வுகள்

மலையகமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்ட்டு 85 ஆண்டுகள் கடந்துள்ளன.

பல்வேறு விமர்சனங்களுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் மலையக மக்களுக்கு இதுவரை காலமும் உறுதியான ஒரு தலைமைத்துவத்தை இ.தொ.கா வழங்கி வருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அர்ப்பணிப்பும் மக்களுக்கான சேவைகளுமே இதற்கான காரணங்கள் ஆகும். இ.தொ.கா

85 வது ஆண்டு நிறைவை நாளை(25) கொண்டாடுகின்றது. நாளை இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.கா ஊடகப்பிரிவு அறிக்ைகயொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மலையக மக்கள் அனுபவித்துவரும் உரிமைகள், சலுகைகள் தொடர்பாக கடந்த காலங்களிலே இ.தொ.கா எடுத்த முடிவுகள் மக்களின் நலனுக்கு எதிராக அமைந்ததில்லை. தோட்டப் பகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகள், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் அரசுடன் இணைந்து இ.தொ.கா பரிகாரம் தேடியது.

தேடியும் வருகிறது. அத்துடன் இதுவரை காலமும் இ.தொ.கா எவரையும் உதாசீனம் செய்ததில்லை. அனைவரையும் ஒருங்கே இணைத்து மலையக மக்களின் கட்டுக்கோப்பை அன்று முதல் இன்றுவரை கட்டிக்காத்தே வந்திருக்கின்றது.

இந்த நல்ல நாளில் இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, இ.தொ.கா முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பெரும் சேவைகளை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். 85ஆவது வருடநிறைவாண்டில் அமரர்களை நாம் நினைவு கூருகின்றோம்.

இதனையிட்டு கொழும்பு இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனோடு மலையகமெங்கும் அன்றையதினம் தோட்ட ஆலயங்களிலும், எமது கிளைக்காரியாலயங்களிலும் பூஜைகள் நடைபெறவுள்ளன.

85ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் இத்தருணத்தில் அனைவருடன் இணைந்து நாமும் இ.தொ.காவை வாழ்த்துகின்றோம்.

CATEGORIES
Share This