மகிந்தவும் ரணிலின் ஆலோசகரும் கதிர்காமத்தில்: தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமா? ஊடகப் பிரிவின் செய்தி என்ன?

மகிந்தவும் ரணிலின் ஆலோசகரும் கதிர்காமத்தில்: தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமா? ஊடகப் பிரிவின் செய்தி என்ன?

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தின் சமய நிகழ்வுகளில் சாகல ரத்நாயக்க கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் எசல மஹா பெரஹரா நேற்று முன்தினம் (21) வீதி உலா வந்தது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க அன்றைய தினம் கதிர்காமம் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்ற சாகல ரத்நாயக்க முதலில் கிரிவெஹர விகாரை பீடாதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

கதிர்காமம் வருடாந்த எசல மஹா பெரஹராவின் இறுதி நாளான 21ஆம் திகதி கலச ஊர்வலம் ஆரம்பமாகி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

மகிந்த ராஜபக்ச மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இதில் கலந்துக்கொண்டனர்.

கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹரா உற்சவத்திற்காக விகாரைக்கு வந்திருந்த பக்தர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் சாகல ரத்நாயக்க ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுச் செல்வங்களைப் பயன்படுத்தும் சாகல ரத்நாயக்கவின் அரசியல் பிரச்சாரம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தான் பயணித்த சூப்பர் எலைட் வாகனத் தொடர் பேரணியை கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறாக அதிகார பலம் பொருந்திய சாகல ரத்நாயக்க, முன்னாள் ஜனாதபதி மகிந்த ராஜபக்சவுடன் கதிர்காம சமய சடங்குகளில் கலந்துக்கொண்டமை எதிர்வரும் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையாகவும் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

CATEGORIES
Share This