அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு – துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு – துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்

. பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு “Truth Be Hold” என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தெடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்; உடன்படிக்கை கைச்சாத்து | Tamil Common Candidate In Presidential Election

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு
நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் உடன்படிக்கையில், கையொப்பமிட்டனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேட்புமனுவை உடனடியாக அறிவிக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உரிய நேரத்தில் தனது முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நேற்று உறுதியளித்தார்.

“அமைச்சர் ரணதுங்கவினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் நீங்கள் பதிலளிக்க வேண்டும். அமைச்சர் ரணதுங்கவின் அழைப்பிற்கு நான் சரியான நேரத்தில் பதிலளிப்பேன்” என்று கடவத்தையில் நடைபெற்ற பேரணியில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ரணதுங்க சற்று முன்னர் வலியுறுத்தியுள்ளார்.

“கம்பஹா மக்கள் உங்கள் முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். நீங்கள் போட்டியிடும் விருப்பத்தை அறிவிப்பதில் தயவு செய்து இனியும் தாமதிக்க வேண்டாம்” என அமைச்சர் ரணதுங்க உறுதியுடன் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் அரசியல் சூழல் தேசிய ந

CATEGORIES
Share This