பக்திமயமாக காட்சியளித்த பசறை மாநகர்; 12 தேர்கள் ஓரிடத்தில் சங்கமம்

பக்திமயமாக காட்சியளித்த பசறை மாநகர்; 12 தேர்கள் ஓரிடத்தில் சங்கமம்

பசறையில் சிறப்புமிக்க வருடாந்த ஆடி மகோற்சவ தேர் திருவிழா ஊர்வலம் நேற்று மாலை (20 ) ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.

பசறை பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என போற்றப்படுகின்ற அம்மணிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், பசறை நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், எல்டெப் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய கோயில், கோணக்கலை கீழ்பிரிவு தோட்ட அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயில், டெமேரியா மாத்தன்னை தோட்ட அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில், கோணக்கலை மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம், கல்குடாவத்தை முருகன் ஆலயம் ஆகியவற்றின் தேர்கள் பசறை நகரை வலம் வந்தன.

இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர். பசறையில் நடைபெறுகின்ற சிறப்புமிக்க தேர் திருவிழாவில் இம்முறை பன்னிரண்டு தேர் பவனிகள் இடம்பெற்றன.

1965ஆம் முதல் பசறை பிரதேசத்தில் நடைபெறுகின்ற தேர் திருவிழா இலங்கையில் அதிக எண்ணிக்கையான தேர் பவனிகள் ஓரிடத்தில் சங்கமிக்கின்ற சிறப்புமிக்க கலாசார விழாக்கோலமாக இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan
CATEGORIES
Share This