ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு !

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு !

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஒருவரை நியமித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) தேசபந்து தென்னகோன் நேற்று ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கும் , முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியதாக பொலிஸ் மா அதிபர்தெரிவித்துள்ளார். .

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்கள் அல்லது வேட்புமனுக்கள் தொடர்பான தகுந்த ஆவணங்களை தேசிய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிறகு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும், என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியைத் தொடர்ந்து.
வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

CATEGORIES
Share This