சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள்
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா எலிய ஆலய வருடாந்த மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் லட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்கு முன்னதாக 17ஆம் வெள்ளிக்கிழமை, கிரியாரம்பம் காலை 8 மணிமுதல் கர்மாரம்பம், தீர்த்தம், கிரகப் பிரதர்ஷணம், சாந்திகள், பூர்வாங்க கிரியைகள், மாவை கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தாபனமும் 18ஆம் திகதி எண்ணெய்க் காப்பும் நடைபெறவுள்ளது.
காலையில் பால்குட பவனியும், சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரிலிருந்து சீதையம்மன் கோயிலுக்கு புறப்படும்.இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் 5 ஆயிரம் லட்டுக்களை வழங்குவதோடு, இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.