அனுர ஜப்பான் சென்றார்: தேர்தலுக்கு முன் இறுதி பயணம்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தமது இறுதி வெளிநாட்டு பயணத்தை ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ளார்.
புலம்பெயர் இலங்கையர்களின் உறவுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அனுரகுமார திஸாநாயக்க கடந்த மூன்று வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இத்தாலி, சுவீடன், அவுஸ்ரேலியா, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளுக்கு அனுரகுமார திஸாநாயக்க பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், பல்வேறு இலங்கையர்கள் மத்தியில் தமக்கான ஆதரவையும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதிக்கு முன் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடைபெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்களை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதுடன், இம்மாத இறுதியில் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன் அனுரகுமார திஸாநாயக்கவின் இறுதி வெளிநாட்டு பயணம் ஜப்பானுக்கு இடம்பெற்றுள்ளது.
ஜப்பானில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றதுடன், பல்வேறு மக்கள் சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இதன் பிரகாரம் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுகுபா நகரில் இடம்பெற உள்ளது.
தேர்தல் திகதி வெளியானது இலங்கையில் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதால் உடனடி விஜயமாக அனுரகுமார ஜப்பான் சென்றுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.