உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால் 4,500 கோடி ரூபா நாட்டுக்கு நட்டம்

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால் 4,500 கோடி ரூபா நாட்டுக்கு நட்டம்

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அழுத்தங்களினால் உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞசன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் புனரமைப்பு தாமதமான 5 ஆண்டுகளில் 4,500 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாம்பூர் மின் உற்பத்தி நிலையம் புனரமைக்கப்படாவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 3,200 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This