ஒவ்வொரு புத்தாண்டிலும் ’ஒரு நாள் ஊரடங்கு’ பிறப்பிக்கும் பாலி தீவு – ஏன் தெரியுமா?

ஒவ்வொரு புத்தாண்டிலும் ’ஒரு நாள் ஊரடங்கு’ பிறப்பிக்கும் பாலி தீவு – ஏன் தெரியுமா?

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது நமக்கு கடும் சிரமத்தை கொடுத்தது. ஆனால் இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவிற்கு இதெல்லாம் புதுசே கிடையாது என்றே கூறலாம். இந்தோனேசியாவின் பாலி தீவில் ஒவ்வொரு ஆண்டும் நைபி என்கிற புது வருடத்திற்காக முழு நாள் ஊரடங்கு அங்கு பிறப்பிக்கப்படுகிறது.

ஒரு வருடம் முடிந்த பின்பு புது வருடம் ஆரம்பிக்கக்கூடிய நாட்களில் பாலி மக்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்கிறார்கள்.
மேலும் பாலி தீவில் நைபி புத்தாண்டின் போது எல்லா வணிக நிறுவனமும், ஏன் பாலித்தீவின் விமான நிலையம் கூட அன்று ஒரு நாள் முழுவதுமாக மூடப்படுகிறதாம்.

அன்றைய தினம் பாலின மக்கள் நெருப்பினையும், எந்த ஒரு ஒலியினையும் (சத்தங்கள்) எழுப்பாமல் இருக்கின்றனர். குறிப்பாக அந்த பண்டிகையின் போது அருகில் இருப்பவர்களிடம் பேசும்போது காது அருகே தான் பேசுவார்களாம்.

இந்த பண்டிகையின் போது பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வெளியே வராமல் இருக்க காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபடுவார்களாம்.

இந்த புத்தாண்டில் ஏன் இப்படி ஒரு பழக்கம் என கேட்டால் இது பாலி மக்களின் பழமையான நம்பிக்கையாக உள்ளது.

பல நூறு ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் தாங்கள் இருக்கக்கூடிய தீவு காலியாக இருப்பதைக் கண்டு பேய்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு அந்த தீவிற்கு வராது என நம்புகின்றனர்.

இதனால் சில நன்மையும் ஏற்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு இந்தோனேசியா வானிலை மையம் நடத்திய ஆய்வின்படி நைபி தினத்தில் மட்டும் அந்த நகரில் 23 சதவீதம் முதல் 78% வரை காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பண்டிகை நாட்களில் கொண்டாட்டங்கள் அதிகமாக இருக்கும் ஆனால் வருட தொடக்கத்தில் பாலித்தீவு ஊரடங்கு போல அமைதியாக இருப்பது ஆச்சரியமும் மர்மமும் நிறைந்ததாக உள்ளது.

CATEGORIES
Share This