உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்

உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்

இந்தியாவின் சண்டிகரில் இருந்து திப்ருகர் சென்ற திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கோண்டாவிற்கு அருகிலுள்ள ஜிலாஹி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

குறைந்தது 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்ட தகவல்களின்படி, பயணிகள் பலரும் சிக்கியுள்ளதாகவும், திப்ருகர் எக்ஸ்பிரஸின் ரயில் பெட்டிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜிலாஹி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This