ரணில் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது

ரணில் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களை முன்வைக்காத போதிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதைகள் காரணமாக சிலர் பலவருடகாலமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சிலர் வழக்குகள் கைவிடப்பட்ட பின்னரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் எனப்படும் சட்;டம் நபர்களை நீண்டகாலத்திற்கு அதிகாரிகளின் அனுமதியுடன் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது நீதிமன்றத்தின் கண்காணிப்பு இன்றி இதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த சட்டம் சித்திரவதைக்கு எதிரான போதியபாதுகாப்பின்மைகளை கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2022 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஆற்றிய உரையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கினார்,எனினும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச்;சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தப்படுவதால் சிவில்சமூகம் அரசாங்கமட்டத்திலான ஊழல் குறித்து ஆராய முடியாத நிலையில் காணப்படுவதாக 2023 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்படும் அச்சநிலை அவ்வாறானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் விரிவான உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இயந்திரம் அப்பாவி மக்களை குறிவைப்பதற்காகவும்,விமர்சனங்களில் ஈடுபடுபவர்களை மௌனமாக்குவதற்காகவும் சிறுபான்மை சமூகங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தின் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக சிறியளவு முன்னேறங்கள் ஏற்பட்டுள்ளன,இலங்கையின் வெளிநாட்டு சகாக்கள் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This