சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகிறாரா ரணில்?

சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகிறாரா ரணில்?

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக புதிய ஒரு அடையாளத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் “திவயின” சிங்கள நாளிதழுக்கு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது காணப்படுவது அரசியல் பிரச்சினை அல்ல, பொருளாதார பிரச்சினை எனவும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சிலரால் முடிந்தாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நாட்டில் உள்ள ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் தெரிவித்தார்.

வீழந்து கிடந்த நாட்டை ஒரு அளவுக்கு கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அதனை புரிந்துக்கொண்டு தற்போதைய ஜனாதிபதியையே வருங்கால ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த அவர் பொதுமக்கள் தவறான ஒர தீர்மானத்தை எடுத்து நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்நத பின்னர் வருத்தப்படுவதில் பயனில்லை என வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒரு சிலர் தயாராக இருந்தாலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வழிமுறைகள் அறிந்த ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்பது பெரும்பான்மையான கருத்தாகும், எனினும் இது தொடர்பில் பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரயவசம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This