பிரபல கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொலை- தொடரும் விசாரணைகள்!
அம்பலாங்கொடை – கந்த மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார். அடையாளம் தெரியாத தரப்பினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 41 வயதான அவர், தமது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பொழுது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.<br துப்பாக்கிச் சூட்டை நடத்திய தரப்பினர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இலங்கை அணியில் தம்மிக்க நிரோஷன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES செய்திகள்