ராஜபக்ச தரப்புடன் இணையும் சனத் நிஷாந்தவின் மனைவி?; உருவாகும் மற்றுமொரு பெண் அரசியல்வாதி

ராஜபக்ச தரப்புடன் இணையும் சனத் நிஷாந்தவின் மனைவி?; உருவாகும் மற்றுமொரு பெண் அரசியல்வாதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் கோகிலா குணவர்தன தற்போது முழுவதுமாக ரணில் பக்கம் இணைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை ராஜபக்ச தரப்புடன் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சமரி பிரியங்கா பகிரங்கமாக ராஜபக்ச அணியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்திற்கு கம்பஹா மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் கோகிலா குணவர்தன பங்குபற்றாமை அவதானிக்கப்பட்டது.

சனத் நிஷாந்த திடீர் விபத்தால் உயிரிழந்ததையடுத்து அது சந்தேகத்திற்குரியது என அவரது மனைவி சமரி பிரியங்கா குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, சனத் நிஷாந்தவின் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு பிரவேசிக்குமாறு அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய சனத் நிஷாந்தவின் மனைவி கம்பஹாவிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பதன் மூலம் கோகிலா குணவர்தனவுக்கு எதிராக அவரை முன்னிலைப்படுத்துவது தெளிவாகிறது.

CATEGORIES
Share This