“ராஜபக்சவுடன் இருந்த காலத்தில் உள்ளாடைகளையும் பகிர்ந்தளித்தேன்“

“ராஜபக்சவுடன் இருந்த காலத்தில் உள்ளாடைகளையும் பகிர்ந்தளித்தேன்“

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவர் ஒருவரே தேவைப்படுவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தல் நெருங்கும் வேளையில் அதனை வழங்குவதாகவும் இதனை வழங்குவதாகவும் சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் பொருட்களை வழங்குகின்றனர்.

நான் மஹிந்தவுடன் இருந்த காலத்தில் உள்ளாடைகளையும் பகிர்ந்தளித்தேன். ஆனாலும் தேர்தலில் தோல்வியே அடைந்தேன். அதன்பின்னர் சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிட்ட போது காலிமுகத்திடலை நிறைத்தார். அவரும் தோல்வியே அடைந்தார்.

சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்கும் சட்டத்தை பாதுகாப்பதற்கு ஆலோசனை வழங்கும் கலாநிதிகள் பேராசிரியர்களை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் வெளிநாட்டில் திருடிய நிதியை மீண்டும் இலங்கைக்கே கொண்டு வரும் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும்.

சட்டத்தரணிகளில் உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரே ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். நான் அறிந்தவரையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மாத்திரமே உள்ளார்.

அதேப்போன்று ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுடனும் கலந்துரையாடி வருகிறோம். ஏனையோரை வீட்டுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கூறுவது அனைத்தும் பொய்.

CATEGORIES
Share This