நாமலின் முயற்சிகள் காற்றில்: ரணில் பக்கம் நிற்கும் ராஜபக்ச குடும்பம்

நாமலின் முயற்சிகள் காற்றில்: ரணில் பக்கம் நிற்கும் ராஜபக்ச குடும்பம்

ஐனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பொருத்தமான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க முடியாமல் போனால், அதற்குத் தான் முன்னிலையாவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றுக்காக பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச கலந்துக்கொண்ட போதே இந்த விடயம் வெளிவந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து சாகல ரத்நாயக்க மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் அதற்கு தலைமை தாங்கியுள்ளனர்.

அன்றைய தினம் கலந்துரையாடலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற யோசனை தொடர்பில் அநேக காரணிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது அதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு ராஜபக்ச குடும்பத்திடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, நாமல் ராஜபக்ச 2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இம்முறை ஒத்திகைக்காக கலந்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் பலனலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This