நட்பை பயன்படுத்தி ரஷியாவிடம் போரை நிறுத்த சொல்லுங்கள்- இந்தியாவை வலியுறுத்தும் அமெரிக்கா
ரஷியாவுடன் வைத்துள்ள நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த அந்நாட்டிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் மேக்லியோட் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்து இருந்த, “இது போருக்கான காலம் இல்லை” என்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா உள்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்த அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா வலுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. ரஷியா உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும். பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை.”
“இந்தியா மற்றும் ரஷியா இடையே மிகவும் விசேஷமான நட்புறவு உள்ளது. இந்த நட்புறவை பயன்படுத்தி ரஷியாவிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஐநா விதிகளை மீறும் செயல்,” என்று அவர் தெரிவித்தார்.