தேசிய பூங்காவில் வெள்ளம்: ஆறு காண்டாமிருகங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் பலி!
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு சுமார் ஆறு அரிய காண்டாமிருகங்கள் உட்பட 137 விலங்குகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.
வடகிழக்கு இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் பருவமழையின் போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பொதுவான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு காண்டாமிருக குட்டிகள் மற்றும் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட 99 விலங்குகளை பூங்கா அதிகாரிகள் மீட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, பூங்காவில் உள்ள 233 முகாம்களில் 70 முகாம்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் 350 இற்கும் மேற்பட்ட விலங்குகள் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் விலங்குகள் மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தபோது வாகனங்கள் மோதி இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.