தென்கொரியாவில் முக்கிய தீர்ப்பு: 15 ஆண்டுகள் சிறை

தென்கொரியாவில் முக்கிய தீர்ப்பு: 15 ஆண்டுகள் சிறை

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவரைக் கத்தியால் குத்திய 67 வயது ஆடவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பூசான் நகருக்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியூங் தாக்கப்பட்டார்.

நபர் ஒருவர் லீயின் பெயரைக் கொண்ட காகித மகுடத்தை அணிந்துகொண்டு அவரை அணுகி கையெழுத்து கேட்டிருந்தார். பின்னர் அவர் லீ ஜே மியூங் மீது பாய்ந்து கத்தியால் குத்தினார். இதுதொடர்பான காணொளிகளும் பதிவாகியிருந்தன.

தாக்குதலுக்குத் தென்கொரிய ஜனாதிபதி யூன் சூக் யோலும் மற்ற அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜனநாயகப் பிரதிநிதி ஒருவரை அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று பூசான் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதேவேளை, ஷலீ மீண்டும் ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லீயின் கட்சி பல தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. இது ஜனாதிபதி யூன்னுக்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் பின்னடைவாக அமைந்தது.

இருப்பினும், லீயின் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறிமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This