நடனமாடி கமாலா ஹாரிஸ் குறைபாடுடையவர் என சித்தரித்த ட்ரம்ப்: வைரலாகும் காணொளி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை குறைபாடுள்ள நபர் என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் பிராதான வேட்பாளர்களான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதுடன் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இருவரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் அதிகம் தாக்குதல் மேற்கொள்வதை காணமுடிகிறது.
வோஷிங்டன் டிசியில் நடைபெற்ற வருடாந்திர மாம்ஸ் ஃபார் லிபர்ட்டி நிகழ்வில், 78 வயதான ட்ரம்ப், குழுவின் இணை நிறுவனருடன் மேடையில் நடனமாடினார்.
டொனால்ட் ட்ரம்ப் பொது நிகழ்வொன்றில் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வயதில் டிரம்ப் நடனமாட முடிந்ததற்காக சிலர் உற்சாகப்படுத்தியதுடன் மேலும் சிலர் நகைப்புக்குரியது என கேலிக்குள்ளாக்கியுள்ளனர்.