இலங்கைக்கு வரும் அண்ணாமலை; சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்கிறார்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிகாக்க வைக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள அவரது இல்லதுக்கு விசேட விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிலும் சம்பந்தனின் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ள இறுதி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அதேபொன்று பன்நாட்டு இராஜதந்திரிகளும் இறுதி நிகழ்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.