14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது தொழிற்கட்சி: பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது தொழிற்கட்சி: பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட கீர் ஸ்டார்மர் வெற்றியீட்டியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங், தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோக்ராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நியமித்தன.

இதில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் என்றும் தொழிற்கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியமைக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.

வாக்கு எண்ணிக்கையில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி முன்னிலை வகித்தது.

பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேலாக தொழிற்கட்சி வென்றது.

இதன்படி தொழிற்கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், கீர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

சுமார் 14 வருடங்களின் பின்னர் தொழிற்கட்சி பிரித்தானியாவின் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய சங்கத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.

16 கோடி வாக்காளர்களைக் கொண்ட பிரித்தானியாவில் வாக்குச் சீட்டு முறையின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This