ரணிலுக்கு மற்றுமொரு ‘நற்செய்தி’: சஜித்துக்கு சோகம் – கட்சித் தாவும் முக்கிய புள்ளி

ரணிலுக்கு மற்றுமொரு ‘நற்செய்தி’: சஜித்துக்கு சோகம் – கட்சித் தாவும் முக்கிய புள்ளி

ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களும் ஐ.தே.கவின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்ட ராஜித சேனாரட்ன, விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளை இணைந்து கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணியை உருவாக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக ராஜித சேனாரட்னவும் செயல்பட உள்ளார். கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐ.ம.சவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக அறிய முடிகிறது.

Oruvan

சப்ரகமுவ மாகாண ஆளுநரும் மயந்த திஸாநாயக்கவின் சகோதரருமான நவீன் திஸாநாயக்க, இவரை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றிய மயந்த திஸாநாயக்க, தாம் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென நிராகரித்துடன், தாம் தொடர்ந்து எதிர்க்கட்சியிலேயே செயல்பட உள்ளதாகவும் கூறினார்.

CATEGORIES
Share This