நாடு முழுவதும் ஆசிரியர் – அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு: கல்வி நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிப்பு

நாடு முழுவதும் ஆசிரியர் – அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு: கல்வி நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிப்பு

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை பாரியளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை தினமான இன்று கொழும்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைத்து இன்று பிற்பகல் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, எத்தனை வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் இவ்வருடம் சம்பளத்தை உயர்த்துவதற்கு திறைசேரியில் போதிய பணம் இல்லை என குறிப்பிடுகின்றார்.

வவுனியாவில் மாணவர்களின் வருகை குறைவு
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

பிள்ளைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதோடு இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This