சொர்க்கத்தில் வீடு வாங்கிக்கொடுக்கும் தேவாலயம் – ஒரு சதுர அடி 100 டொலர்கள்!
பூமியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கமென்றாலே கோடிக் கணக்கில் செலவாகிறது. ஆனால் சொர்க்கத்தில் வீடு வாங்குவதென்றால் எவ்வளவு செலவாகும்.
அப்படியானதொரு சம்பவம்தான் மெக்சிகோவில் நடந்துள்ளது.
மெக்சிகோவில், இன்லேசியா என்ற தேவாலயம் சொர்க்கத்திலுள்ள மனைகள் ஒரு சதுர அடி 100 டொலர்கள் என்ற கணக்கில் விற்பனை செய்து வருகிறது.
இந்த சொர்க்க மனைகள் விற்பனையினால் மில்லியன் கணக்கான டொலர்கள் தேவாலயத்தில் வந்து குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டில் இத் தேவாலய அருட்தந்தை கடவுளைச் சந்தித்துள்ளார் என்றும், அச் சமயம் சொர்க்கத்திலுள்ள வீடுகளை விற்பனை செய்ய அருட்தந்தைக்கு கடவுள் அங்கீகாரமளித்தார் என்றும் கூறி, தேவாலயம் இந்த மனை விற்பனையை செய்து வருகிறது.
சொர்க்கத்தில் ஒரு சதுர அடியின் ஆரம்பக்கட்ட விலை நூறு டொலர்கள். மனைகளை வாங்க விருப்பமுள்ளவர்கள் இணைய வழியாக பணத்தை செலுத்தலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மனை விற்பனையை விளையாட்டாகவே குறித்த தேவாலயம் ஆரம்பித்துள்ளது. நாளடைவில் மக்கள் இதில் மும்முரம் காட்டி சொர்க்க மனைகளை வாங்கிக் குவிக்கின்றனர்.