உயிர்பலியெடுக்கும் ‘சண்டிபுரா’ இதுவரை 36 பேர் பலி !

உயிர்பலியெடுக்கும் ‘சண்டிபுரா’ இதுவரை 36 பேர் பலி !

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பரவி வரும் ‘சண்டிபுரா’ வைரஸ் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்த 36 பேரில் 15 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

‘சண்டிபுரா’ என்பது மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகளால் பரவும் வைரஸ் காய்ச்சல் நிலை. இது சிறு குழந்தைகளை மிக விரைவாக தாக்கும் வைரஸ். ‘சண்டிபுரா’ வைரஸ் இந்தியாவில் முதன்முதலில் 1965 இல் கண்டறியப்பட்டது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘சண்டிபுரா’ கிராமத்தில் கண்டறியப்பட்டதால்
இந்த வைரஸ் அந்த பெயரில் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனமும் ‘சண்டிபுரா’ வைரஸ் குறித்து கண்காணித்து வருகிறது.
9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர்.
சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை.
சண்டிபுரா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது காய்ச்சல் ஏற்படும். இது சாதாரண காய்ச்சல் என்று தவறாக நினைக்கப்படுகிறது. ஆனால் வைரஸ், கடுமையான மூளையழற்சியை ஏற்படுத்துகிறது. நோய்க்கிருமி ராப்டோவிரிடே குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸின் பாதிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வதற்கு முன்பே அது குழந்தையின் உயிரை எடுத்துவிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
Share This