வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்தீக்கிரையான பாராளுமன்றம்:

வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்தீக்கிரையான பாராளுமன்றம்:

கென்ய தலைநகர் நைரோபியில் வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கென்ய பாராளுமன்றத்தில் வரி அதிகரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தீர்வுகளை பொதுவௌியில் அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்

கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வந்து நிலையில்
நேற்றைய தினம் திடீரென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.

அப்போது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீவைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். .

CATEGORIES
Share This