உலகின் இளைய பேராசிரியர் !

உலகின் இளைய பேராசிரியர் !

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.

அவரது அறிவுத்திறன் காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக விரிவுரைகளை வழங்க அவருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போட்டித் தேர்வான SAT தேர்வில் 11 வயதில் 1500 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்தார் சுபோனோ பரி.
சுபோனோ பாரி அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் டிப்ளோமா பெறும் இளைய மாணவர் ஆவார்.
நாளை மறுதினம் (26) நடைபெறும் விழாவில் அவர் டிப்ளோமா பெற உள்ளார்.

கணிதம் மற்றும் இயற்பியலில் அவரது திறமையின் காரணமாக, பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

CATEGORIES
Share This