தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்!

தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பமானது.

பொது மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெறப்படாமலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விகாரையை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது. 

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This