கனடாவில் வறியோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் வறியோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது.
உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் கனடாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் ஆறு மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வறுமை நிலையை தீர்மானிக்காது மக்களின் கொள்வனவு இயலுமை அடிப்படையில் வறுமை குறித்த தகவல்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 30 வயதானவர்களில் 30 வீதமானவர்களும் ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் 45 வீதமான குடும்பங்களும், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 42 வீதமானவர்களும் வறுமையில் வாடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This