கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் எனும்நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதை விழுப்புரம் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து சேலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். 12 ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This