அனுரவின் அரசாங்கத்தில் எத்தனை அமைச்சர்கள்?

அனுரவின் அரசாங்கத்தில் எத்தனை அமைச்சர்கள்?

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவார் என சில கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தாம் ஜனாதிபதியாக தெரிவான அன்று இரவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் ஜுலை முதல்வாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தகவல்களை அனுரகுமார வெளியிட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

Oruvan

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்களே நியமிக்கப்படுவர் என அக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

25 அமைச்சர்களை நியமிப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவை விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்படும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு இடையில் உரிய உறவுகளை பேணுவம் வகையில் அமைச்சுகள் வகுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மக்களும் தங்கள் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ளும் வகையில் அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This