கொரிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ‘ இறைச்சி அரிசி’

கொரிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ‘ இறைச்சி அரிசி’

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள விஞ்ஞானிகள் குழு, மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளது.

எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஒரு அற்புதமான உணவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பை இந்த அரிசியில் சேர்ப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ‘இறைச்சி சாதம்’ எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளிலும், கிரக ஆய்வுகளிலும் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு வகையான சத்தான அரிசியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இது வெண்ணெய் போன்ற வாசனை தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

CATEGORIES
Share This