பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: கண்டுக்கொள்ளாத வலய கல்வித் திணைக்களங்கள்?
பாடசாலை மாணவர்களிடையே போதைபொருள் பாவனை அதிகரிப்பானது சமீபகாலமாக அதிகரித்த வண்ணமே உள்ளது.
மேலும், கடந்த வருடங்களில் பல பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போதைபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
அந்தவகையில், மீண்டும் போதைபொருள் பாவனை தலைதூக்கியுள்ளது.
கண்டி – மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற போர்வையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியானது சமீப வலைத்தளங்களில் தற்போது பேசுபொருனாக மாறியுள்ளதுடன் பலர் இதற்கு எதிரான விமர்சனங்களையும் முன்னிறுத்தி வருகின்றனர்.
குறித்த பாடசாலையிலிருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு மோசடி செய்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் 2மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மோசடி நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைபொருள் பாவனை அதிகரிக்கின்றமையானது பாடசாலை சமூகத்தில் மிகவும் பாதூரமான பிரச்சினைகளை உண்டுபண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் முழுக்கவனம் செலுத்துவதுடன், வலய கல்வி திணைக்களங்களும் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.