பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் – தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் லயனல் ஹேரத் தெரிவிப்பு !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் – தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் லயனல் ஹேரத் தெரிவிப்பு !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அதிகபட்ச வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார் . தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
மேலதிக தேயிலைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளதாகவும் இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். முன்னர் 1,000 ரூபாவாக காணப்பட்ட வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக 70 சதவீதம் வேதன அதிகரிப்பு இடம்பெறும். தொழிற்துறையில் உள்ளவர்கள் வேதனத்தை அதிகரிக்குமாறு எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. முழுமையாக அரசியல் நோக்கத்திற்காக இந்த செயற்பாடு இடம்பெறுகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவு வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது நியாயமான விடயமாக கருத முடியும். எனினும் 1,700 ரூபாவாக வேதனத்தை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் வேதனத்தை கொண்டு வாழ்க்கையை முன்னோக்கி செல்வதற்கு பழக்கமடைந்துள்ளனர். இந்த நிலையில் தொழிற்துறைக்கு அமைய நாளாந்த வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே செலுத்த முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். அத்துடன் மேலதிக தேயிலை கிலோவொன்றுக்கு 65 ரூபாய் செலுத்துவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் ஒன்றை இலக்கு வைத்தே அரசாங்கம் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கின்றது. இதற்கு முன்னரே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்க முடியும். அதேநேரம் நீதிமன்றம் உத்தரவிடுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனத்தை செலுத்த நேரிடும். எனினும் அதனைத் தொடர்ந்து தேயிலை தொழிற்துறையும் வீழ்ச்சியடையும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This