போக்குவரத்து அமைச்சின் பெயரில் பதிவான பெறுமதிமிக்க வாகனங்களை காணவில்லை

போக்குவரத்து அமைச்சின் பெயரில் பதிவான பெறுமதிமிக்க வாகனங்களை காணவில்லை

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 கார்கள் , 02 மோட்டார் சைக்கிள்கள் , 10 கெப் ரக வண்டிகள் , 02 ஜிப் வண்டிகள் லொறியொன்று காணாமல் போயுள்ளதாக இலங்கைத் தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வாகனங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய முடியாமல் உள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்ந்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் வெளியாகவில்லை என்றும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

மேலும், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த வாகனங்கள் அமைச்சகத்தின் வாகனப் பட்டியல் மற்றும் சொத்துக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல், மோசடி ஒழிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது .

அனைத்து அரச வாகனங்களும் மீளப் பெறப்பட்ட நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே ஊழல்வாதிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This