மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியது அவுஸ்திரேலியா: ஜூலை ஒன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியது அவுஸ்திரேலியா: ஜூலை ஒன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், அவுஸ்திரேலியாவிற்கு செல்லும்போது வருகை விசாவில் இருந்து மாணவர் விசாவிற்கு மாறுவதற்கான வாய்ப்பு இனி சாத்தியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூலை ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Clare O’Neil அறிவித்துள்ளார்.

அந்த வகையில், Temporary Graduate visa, Visitor visa, Electronic Travel Authority visa, Medical Treatment visa, eVisitor visa, Transit visa, Diplomatic Temporary visa, Temporary Work visa (International Relations), Domestic Worker (Temporary) visa போன்ற தற்காலிக விசாக்களை வைத்திருப்பவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.

எவ்வாறாயினும், விசாக்கள் தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் புதிய விதிகள், அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதித்த அதிகாரத்துவ ஓட்டைகளை மூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்களும் இனி அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என அமைச்சர் Clare O’Neil குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் பார்வையாளர் விசா விண்ணப்பதாரர்கள் நாட்டிற்கு வெளியே இருந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத் தரவுகளின்படி, அவுஸ்திரேலியாவில் வருகையாளர் விசாவில் இருந்து மாணவர் விசாவிற்கு மாறும் செயன்முறை பெருகிய முறையில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This