அனுர ஜனாதிபதியானாலும் பொருளாதாரம் மீளாது

அனுர ஜனாதிபதியானாலும் பொருளாதாரம் மீளாது

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மீண்டெழ சிறிது காலம் எடுக்கும் என கூறிய அவர், வீட்டு பொருளாதாரத்தை உரியமுறையில் நிர்வகிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”தற்போது ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்துவிட்டது. பெரமுனவையும் அவ்வாறே கருதுகிறோம். எல்லோராலும் முடியாது என்றால், அவர்களால் அதைச் செய்ய முடியாது.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கு வழியில்லை.

பால் தேநீருக்குப் பதிலாக தேனீர் குடித்து தேவையற்ற செலவுகளைக் குறைத்து வீட்டுப் பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிப்பது போன்றாவது நாம் கடின அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபடுவோம்.” என்றார்.

CATEGORIES
Share This