உருள போகும் இரண்டு தலைகள்: ரணில் – சஜித்தின் நகர்வு

உருள போகும் இரண்டு தலைகள்: ரணில் – சஜித்தின் நகர்வு

நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர ஜனதா சபையின் தலைவருமான டலஸ் அழகப்பெருமவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலை வீசியுள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணங்கக் கூடியதாக இருப்பதால் அவரை இணைத்துக்கொள்வது கூட்டணிக்கு பலமாக இருக்கும் என சஜித் கருதுகிறார்.

ஜனாதிபதியை தெரிவுசெய்தவற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்தர்ப்பதில் சஜித் தரப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களித்திருந்தது.

அத்தருணத்தில் இருதரப்பினருக்கும் இடையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் குறித்த கூட்டணி முறிவுற்றது.

சுதந்திர ஜனதா சபையில் இருந்த பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய ஆகிய கட்சிகள் மவ்பிம ஜனதா கட்சி தலைமையிலான சர்வஜன அதிகாரக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளதால் டலஸ் அழகப்பெரும சஜித் தரப்புடன் இணையும் எண்ணத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

ராஜித்த சேனாரட்ன எடுத்துள்ள முடிவு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதுதொடர்பில் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. விரைவில் டலஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கடந்தகாலங்களில் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக இதுதொடர்பிலான பேச்சுகளில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் – சஜித் இணைவு அவசியமென கூறியதும் இந்தப் பின்புலத்தில்தான் என தெரியவருகிறது.

விரைவில் அவர் ரணிலுக்கான ஆதரவை தெரிவிப்பார் எனவும் அறிய முடிகிறது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மிக முக்கிய தலைவர்களாக இருக்கும் இருவர் விரைவில் ரணிலுக்கு ஆதரவயிக்க உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித்த சேனாரட்ன இதில் ஒருவர் என சில உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தவர் சம்பிக்க ரணவக்க என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவுடன் சுமூகமான நட்புறவை தொடர்ந்து ரணில் பேணிவருகிறார். பல சந்தர்ப்பங்களில் இருவரும் ரகசிய பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியுடனான உறவில் சம்பிக்க ரணவக்க விரிசலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

CATEGORIES
Share This