வீட்டு வேலை செய்ய ஆண்களுக்கு கற்றுத்தர ஒரு பாடசாலை !

வீட்டு வேலை செய்ய ஆண்களுக்கு கற்றுத்தர ஒரு பாடசாலை !

பொதுவாக, பாடசாலைகளில் கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படும். அங்கு குழந்தைகள் சென்று கற்பார்கள்.
ஆனால் தென்னமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டில், வளர்ந்து பெரிதான ஆண்களுக்கென ஒரு பாடசாலை நடத்தப்படுகிறது.
அதுவும் புதிதல்ல தான். ஆனால் அங்கு கற்றுத்தரப்படும் பாடம்தான் ஆச்சரியமானது.
அப்படியென்ன பாடங்கள்?
‘நல்ல கணவராக இருப்பது எப்படி?’
‘நல்ல தந்தையாக இருப்பது எப்படி?’
கொலம்பியாவில் பாலின சமத்துவமின்மை மிகத்தீவிரமாக இருக்கிறது. பெண்கள் மீது வீட்டு வேலைக்கான பணிச்சுமை பெருமளவில் சுமத்தப்படுகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்காக, அந்நாட்டின் தலைநகர் பொகொதாவின் மேயர் இந்தப் பாடசாலையைத் துவங்கினார்.
இப்பாடசாலையில், மனைவியருடன் வீடு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, குழந்தைகளைப் பராமரிப்பது ஆகியவை ஆண்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.

CATEGORIES
Share This