களைகட்டிய ஆனந்த் அம்பானி திருமண விழா – ஆத்திரத்தில் இத்தாலி மக்கள்!

களைகட்டிய ஆனந்த் அம்பானி திருமண விழா – ஆத்திரத்தில் இத்தாலி மக்கள்!

உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வருகிறார். ஆனந்த் அம்பானிக்குக் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந் திகதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன்பிறகு நடந்த ப்ரீ வெட்டிங் வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் தலைநகர் இத்தாலியில் சொகுசு கப்பலில் கடந்த மே 29-ந் திகதி முதல் 4 நாட்களுக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2 வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. இதில் பிரபல பொப் பாடகி கேட்டி பெர்ரி உட்பட பல சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

பால்மிரோவில் இருந்து கிளம்பிய திருமண கொண்டாட்ட கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை சென்று திரும்பியது. அதன்பிறகு இத்தாலி நகரத்துக்குள் தொடரும் இந்த நிகழ்ச்சிக்காகப் பல இடங்கள், சுற்றுலாப் பயணிகள் வரவும், உள்ளூர் மக்கள் நுழையவும் தடை செய்யப்பட்டது.

கேரளாவைப் போல இத்தாலி நகரத்துக்கிடையில் நீர்நிலைப் போக்குவரத்து அதிகம். திருமண நிகழ்ச்சிக்காக சில நீர் வழிப் பாதைகளை அடைத்ததால் உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ரெஸ்டாரன்டுகள் இந்த நிகழ்ச்சிக்காக மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது.
பணத்தால் அனைத்தையும் வாங்கி மற்றவர்களை வரவிடாமல் செய்வது நியாயமானது அல்ல எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் அபிப்ராயப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இருந்து வரும் அதிக சத்தத்தாலும், நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களின் மரியாதைக் குறைவான நடத்தையாலும் உள்ளூர் மக்களும், விடுதி ஊழியர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிடம் அவர்கள் புகார்களும் அளித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This