கண்ணி வெடிகளுடன் கையளிக்கப்பட்ட காணிகள்; உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை

கண்ணி வெடிகளுடன் கையளிக்கப்பட்ட காணிகள்; உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை

வடக்குத் தமிழர்களுக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகளுக்குள் காணி உரிமையாளர்கள் நுழைய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளில், சுமார் 20 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல வருட காலமாக இலங்கை இராணுவம் ஆக்கிரமித்திருந்த, வடக்கின் தமிழர்களுக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டன.

அதன்படி, தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணியில் 55,000 சதுர அடி பரப்பளவில் கண்ணிவெடிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் காரணமாக கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை காணிக்குள் நுழைய வட மாகாண ஆளுநர் அலுவலகம் முழுமையாக தடை விதித்துள்ளது.

இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்லஸ் மே மாதம் 07ஆம் திகதியன்று பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதேவேளை, இந்தக் காணிகள் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக அரசாங்கப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியிருந்தனரா என்பதை வட மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்திருக்கவில்லை.

காணி விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தெல்லிப்பளை மற்றும் ஒட்டகபுலம் காணிகளின் தொழில்நுட்ப பரிசோதனை ஏற்கனவே மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This