மோடி மூன்றாவது முறையும் பிரதமராகும் வாய்ப்பு?: காங்கிரஸ் கூட்டணியும் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது

மோடி மூன்றாவது முறையும் பிரதமராகும் வாய்ப்பு?: காங்கிரஸ் கூட்டணியும் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 543 மக்களவை தொகுதிகளில், 272 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும்.

வெளியாகியுள்ள முடிவுகளின்படி, நண்பகல் ஒரு மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 296 இடங்களிலும், இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இதன்படி மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.

தேர்தல் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என முடிவுகள் வெளியாகியிருந்தன. எனினும் பிரதான எதிர்க்கட்சிக்கு கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட எண்ணிக்கையை விட யாரும் எதிர்பாராத அளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை 159 வீதத்திற்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேநேரத்தில் ஆளும் கட்சியான பாஜக கூட்டணிக்கு இம்முறை வாக்கு வங்கியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்களுக்கு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது 15 வீத வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளன.

இதேவேளை, தமிழகத்தில் இம்முறையும் திமுக 38 இடங்களில் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், அதிமுக மற்றும் பாஜக தலா 1 இடங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமானால் இந்திய வரலாற்றில் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்த பெருமமை நரேந்திர மோடியை சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This