இலங்கையில் வறுமை நிலை பாரிய அளவில் அதிகரிப்பு

இலங்கையில் வறுமை நிலை பாரிய அளவில் அதிகரிப்பு

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வீதமாக இருந்த வறுமை விகிதம் தற்போது 26 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதியினர் இருப்பதாகவும், அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10 வீதமாக குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “லெஸ்லி தேவேந்திர சிங்கவலோகனயா” என்ற தலைப்பிலான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த நாட்டு மக்களின் துயரம் எனக்குப் புரிகிறது. இந்த நாட்டில் 2019 இல் 15 ஆக இருந்த பொது வறுமை இன்று 26 வீதமாக அதிகரித்துள்ளது. வருமான ஆதாரமும், கல்வி வசதியும் இல்லாத ஒரு பிரிவினர் உள்ளனர். அதன்படி, 2032ஆம் ஆண்டுக்குள் அதை 10 வீதமாக குறைக்க இப்போது ஒப்புக்கொண்டுள்ளோம்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This